பொகவந்தலாவ பொலீஸ் பிரிவின் பெட்ரெசோவத்தை பகுதியில் அனுமதியின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்கள் நேற்று (20) இரவு கைது செய்யப்பட்டனர்.
பொகவந்தலாவ பொலீஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்றுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சோதனையின் போதே குறித்த கைது இடம் பெற்றுள்ளது
மாணிக்கக்கல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களுடன் இருவரும் கைது செய்யப்பட்டு பொகவந்தலாவ பொலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் பொகவந்தலாவ பகுதியைச் சேர்ந்தவர்கள், 35 மற்றும் 40 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(colombotimes.lk)