02 April 2025

INTERNATIONAL
POLITICAL


கைது செய்யப்படுவதைத் தடுக்கக் கோரி தேசபந்து தாக்கல் செய்த ரிட் மனு



2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம டபிள்யூ. 15வது ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தன்னை கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இடைநிறுத்த இடைக்கால தடை உத்தரவைக் கோரி, ஐ.ஜி.பி தேசபந்து தென்னகோன் தனது வழக்கறிஞர்கள் மூலம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

இந்த மனு இன்று (10) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் முகமது லாபர் தாஹிர் மற்றும் சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன் பரிசீலனைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதிவாதிகளுக்கு மனு அனப்பிய பின்னர், மனுவை 12 ஆம் திகதி பரிசீலனைக்கு அழைக்க நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.


(colombotimes.lk)