02 April 2025

INTERNATIONAL
POLITICAL


அங்கொடையில் கடை மற்றும் இரண்டு வீடுகளில் தீ பரவல்



அங்கொடை பிரதேசத்தில் கடையொன்றிலும் இரண்டு வீடுகளிலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீயணைப்பு வாகனங்கள் வருவதற்கு முன்பு பிரதேச மக்கள் தீயை கட்டுப்படுத்த பெரும் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், தீ வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து கட்டுப்படுத்த முடியவில்லை.

தற்போது, ​​கோட்டே மாநகர சபையிலிருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வருகைதந்துள்ளதோடு, தீயணைப்பு பிரிவினர் தீயைக் கட்டுப்படுத்த பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தீ விபத்தில் ஒரு வீடும் ஒரு கடையும் முற்றிலுமாக தீக்கிரையாகியுள்ளதாக தெரியவருகிறது

(colombotimes.lk)