கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான விரிவுரைகள், கற்பித்தல் வகுப்புகள், செயலமர்வுகள் மற்றும் கருத்தரங்குகள் நாளை (19) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன
அறிவுறுத்தல்களை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளின் அடிப்படையில் பரீட்சை காலத்தில் பரீட்சை கண்காணிப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை டிசம்பர் 25ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இது 2,312 தேர்வு மையங்களிலும், 319 ஒருங்கிணைப்பு மையங்களிலும் நடைபெறுகிறது.
இவ்வருடம் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை முந்நூற்று முப்பத்து மூவாயிரத்து நூற்றி எண்பத்து மூன்று ஆகும்.