யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன், அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இது அவரது கைது தொடர்பாக மேலதிக நடவடிக்கைகளை எடுக்க அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பிலேயே இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது
அனுராதபுரம் பகுதியில் பொலிஸ் போக்குவரத்து அதிகாரிகளின் கடமைகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இடையூறு விளைவித்தது தொடர்பான உண்மைகளை அனுராதபுரம் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
அவரது கைது தொடர்பாக மேலும் நடவடிக்கை எடுக்கவும், விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து தெரிவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை விசாரணையின் முடிவுகளை பிப்ரவரி 3 ஆம்திகதி நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு அனுராதபுரம் நீதவான் உத்தரவிட்டார்.
அர்ச்சுனா ராமநாதன் தாக்கல் செய்த மனுவில், தொடர்புடைய வழக்கை இன்று (22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது
(colombotimes.lk)