கோழியின் உடல் பாகங்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.
சீனாவிற்கு கோழித் தலைகள் மற்றும் கால்களை அனுப்ப வணிகர்கள் அனுமதி கோரியதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதன் காரணமாக, தனது கடைசி சீன விஜயத்தின் போது அனுமதி பெறப்பட்டதாகவும், இப்போது வணிகர்கள் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.