போர் நிறுத்தம் அமலில் இருக்கும்போதே ஜெனின் பகுதியில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த வான்வழித் தாக்குதலில் 9 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில், மேலும் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது நீண்ட காலமாக பாலஸ்தீன ஆயுதக் குழுக்களின் கோட்டையாக இருந்து வருகிற நிலையில்
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஜெனின் பகுதியைத் தாக்க ஒரு பெரிய நடவடிக்கை ஆரம்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
காசா பகுதியில் போர் நிறுத்தம் ஆரம்பமாகிய மூன்று நாட்களுக்குப் பிறகு இந்தத் தாக்குதல் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது