நாளை (14) மற்றும் நாளை மறுதினம் (15) நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகள் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொதுத் தேர்தல் மற்றும் பூரணை தினத்தை முன்னிட்டு மதுபானசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மதுபானக்கடைகள் மூடப்படும் தினங்களில் சட்டத்தை மீறும் மதுபானசாலைகளுக்கு எதிராக சட்டம்
கடுமையாக அமுல்படுத்தப்படும் என கலால் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
(colombotimes.lk)