2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் தொடர்பான பிரசாரங்கள் இன்று (11) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க, இன்று நள்ளிரவு தொடக்கம் எதிர்வரும் 14ஆம் திகதி வரை தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வதற்கு தடை விதித்துள்ளார்.
குறித்த காலப்பகுதியில் வேட்பாளரின் வீட்டை அலுவலகமாக நடத்த வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வருட பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 8,352 எனவும் அதில் 5,006 வேட்பாளர்கள் கட்சிகளால் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.