கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பாக கடந்த ஐந்து ஆண்டுகளில் பின்பற்றப்பட்ட பல்வேறு செயல்முறைகளை மதிப்பாய்வு செய்ய முடிவு செய்துள்ளது.
கடந்த காலங்களில் தேசிய கல்வி நிறுவனம் போன்ற பல குழுக்கள் மற்றும் நிறுவன கட்டமைப்புகள் ஊடாக கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான பல்வேறு முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டதாக அதன் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.
உரிய முன்மொழிவுகள் மற்றும் நடைமுறைகளை மீளாய்வு செய்த பின்னர், தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு இணங்க புதிய கல்வி சீர்திருத்த முன்மொழிவு விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் செயலாளர் கூறியுள்ளார்
மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்காத நவீன தொழில் சந்தைக்கு ஏற்ற கல்வி முறையை உருவாக்குவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
(colombotimes.lk)