சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி பணம் சேகரிக்கும் மோசடியில் குழுவொன்று இயங்கிவருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் தொலைபேசி, whatsapp அல்லது வேறு எந்த ஊடகத்தையும் பயன்படுத்தி பணம் சேகரிக்கும் செயலில் ஈடுபடமாட்டார் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறான மோசடி செய்பவர்களிடம் சிக்கினால் வங்கிக் கணக்குகளில் பணம் வைப்பதையோ அல்லது வேறு வழிகளில் பணத்தை அனுப்புவதையோ தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு மக்களுக்கு அறிவித்துள்ளது.
இவ்வாறானவர்களை சட்டத்தின் முன் கொண்டுவருமாறு சுகாதார அமைச்சு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.