புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு ரவி கருணாநாயக்கவின் பெயர் அறிவிக்கப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (18) வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய வஜிர அபேவர்தன நேற்று (18) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி நியமனம் சட்டபூர்வமானது அல்ல என தெரிவித்தார்.
எவ்வாறாயினும், நேற்று (18) அந்த முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பல தரப்பினரும் பாராளுமன்றத்தின் தேசியப்பட்டியலில் அவரது பெயரை உள்ளடக்கியமை தொடர்பில் ஆட்சேபனைகளை எழுப்பினர்.
ரவி கருணாநாயக்கவின் வீடு முற்றுகையிடப்பட வேண்டும் எனவும், இந்த தீர்மானத்தை மாற்றியமைக்க முயற்சிக்க வேண்டும் எனவும் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
எனவே, அவரது வீட்டின் முன் போராட்டம் நடத்தப் போவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தத்தப்பட்டுள்ளது