சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் மூன்றாவது மீளாய்வு தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே பிரதிநிதிகள் குழு இலங்கை வருவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.