22 November 2024


காணாமல் போன வழக்குப் பொருட்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்



அம்பாறை நீதவான் நீதிமன்றின் வழக்கு அறையில் வைத்திருந்த  நகைகள் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பில் நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

1998ஆம் ஆண்டு பொலிஸாரால்  நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட தங்கப் பொதியே காணாமல் போயுள்ளதாக பொலிஸார்
தெரிவிக்கின்றனர் .

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.


colombotimes.lk