தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தங்காலை நோக்கிச் செல்லும் பாதையில், தூண் 138க்கு அருகில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, அதே திசையில் பயணித்த சிமெந்து லாரியுடன் மோதியதில் இன்று (17) அதிகாலை விபத்து ஏற்பட்டுள்ளது
இந்த விபத்தில் காயமடைந்த பேருந்து ஓட்டுநர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பேருந்தில் பயணித்த வெளிநாட்டினரும் காயமடைந்து தங்காலை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
(colombotimes.lk)