உலக வங்கியின் தெற்காசியப் பிராந்தியத்திற்கான துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர் மற்றும் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரியவிற்கு இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது கல்வி, பாலின சமத்துவம் மற்றும் நாட்டின் முக்கிய வளர்ச்சி முன்னுரிமைகள், தேசிய சவால்களை எதிர்கொள்வது மற்றும் நாட்டில் நிலையான முன்னேற்றத்தை அடைவது ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் தொழில்நுட்பம், தொழிற்கல்வி மற்றும் தொழிற்பயிற்சியின் தரத்தை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
(colombotimes.lk)