இலங்கை விமானம் தாமதம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய அமைச்சர் விஜித ஹேரத் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
விமான நிலையத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும் சென்ற அமைச்சர் அங்குள்ள ஊழியர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விமான தாமதம் குறித்த உடனடி தகவல்களை பயணிகளுக்கு வழங்கவும், தாமதத்தின் போது பயணிகளுக்கு தேவையான வசதிகளை வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் விமான நிலையம் மற்றும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை பிரதிநிதித்துவப்படுத்தும் விசேட பிரிவு ஒன்றை அந்த வளாகத்தில் அமைக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த காலதாமதத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
(colombotimes.lk)