இந்த வருடதத்தில் இதுவரையான காலப்பகுதியில் நீதிமன்றங்களால் 3000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் 3,249 சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.