05 January 2025


நேபாள பிரதமரை சந்தித்தார் ரணில்



முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் நேபாள பிரதமர் கே. பி ஷர்மா ஒலிக்கும் இடையில் நேற்று (02) சந்திப்பொன்று காத்மண்டுவில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது நேபாளம் கடுமையான நிலநடுக்கத்தை சந்திக்க நேரிட்ட போது இலங்கையில் இருந்து கிடைத்த உதவிக்கு நேபாள பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இலங்கைக்கும் நேபாளத்துக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த நம்புவதாக நேபாள பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்

(colobmotimes.lk)