07 January 2025


ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது



05 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் அத்துரிகிரிய நகரில் வைத்து நேற்று (04) கைது செய்யப்பட்டுள்ளார்.

அதுருகிரிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது  இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

(colombotimes.lk)