ருஹுனு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து, அந்தப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு வந்துள்ளது.
இன்று (25) காலை 7:00 மணி முதல் வழமை போன்று கடமைக்கு சமூகமளிக்குமாறு தமது தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு அறிவித்துள்ளதாக அந்த பல்கலைக்கழகத்தின் எழுத்தர் மற்றும் தொழிநுட்ப சேவைகள் சங்கத்தின் தலைவர் கலம் கமகே தெரிவித்துள்ளார்.
(colombotimes.lk)