நாடளாவிய ரீதியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் 06 வான் கதவுகளும், அங்கமுவ நீர்த்தேக்கத்தில் 03 வான் கதவுகளும் இதுவரை திறக்கப்பட்டுள்ளன.
ராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் திறக்கப்பட்டுள்ள 06 வான் கதவுகளில் இருந்து வினாடிக்கு 6100 கன அடி நீர் கொள்ளளவு கலா ஓயாவிற்கு திறந்து விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் அங்கமுவ நீர்த்தேக்கத்தில் தலா இரண்டு அடி வீதம் 03 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
(colombotimes.lk)