கல்கிசை பொலிஸ் பிரிவின் படோவிட்ட பகுதியில் நேற்று (15) 06 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிசை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்றுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நடத்திய சோதனையின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் படோவிட்ட பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என தெரியவந்துள்ளது
(colombotimes.lk)