அரசியல் கட்சி தொடர்பான 05 கேள்விகள் பாடசாலை தவணை தாளில் உள்ளடக்கப்பட்டமை தொடர்பில் அவசர விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சின் செயலாளர் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
களுத்துறை மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் இரண்டாம் தவணைப் பரீட்சையில் உயர்தர மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பொதுப் பொதுப் பரீட்சை வினாத்தாளில் அரசியல் கட்சி தொடர்பான 5 கேள்விகள் இடம்பெற்றிருந்ததாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த பாடசாலையினால் வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
முறையான விசாரணையின் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
(colombotimes.lk)