பதுளை - பசறை லுனுகல A5 வீதியின் 13 ஆம் இலக்கத்தின் ஒத்தேக்கடை பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றிரவு (17) இடம்பெற்ற மண்சரிவினால் பாறைகளும் மேடுகளும் வீதியில் விழுந்துள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் இ. எம். ஏ. எல் உதய குமார குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு அவர் அறிவித்துள்ளார்.
வீதியில் விழுந்த கற்கள் மற்றும் மண்ணை அகற்றும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
(colombotimes.lk)