அரிசியை மீண்டும் இறக்குமதி செய்வது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று வர்த்தக, வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மகா பருவ அறுவடை தொடங்குவதோடு நாட்டில் அரிசி பற்றாக்குறை முடிவுக்கு வரும் என்று தற்போது கணிக்கப்பட்டுள்ளதாக துணை அமைச்சர் ஆர். எம் ஜெயவர்தன கூறினார்.
பல மாவட்டங்களில் நெல் அறுவடை ஏற்கனவே தொடங்கிவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அரிசி ஆலைகள் வைத்திருக்கும் நெல் இருப்புகளை சந்தைக்கு வெளியிடுவதற்கு வணிகர்கள் நடவடிக்கை எடுத்து வருவதக்கவும் அவர் தெரிவித்துள்ளார்
(colombotimes.lk)