ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால அரசியல் போக்கு தொடர்பில் நேற்று (16) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி யானை சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது.
எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் யானைச் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி கலந்துரையாடியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.