பொதுத் தேர்தலுக்காக கிராமங்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் கொழும்புக்கு வருவதற்காக விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
இதற்காக நீண்ட தூர சேவை பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இன்று (17) மற்றும் நாளை (18) சில விசேட புகையிரதங்களை இயக்குவதற்கு புகையிரத திணைக்களம் ஏற்பாடுகளை செய்துள்ளது.
கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கு இரவு 7.30 க்கு ரயில் ஒன்று புறப்பட உள்ளது.
மேலும், பதுளையில் இருந்து கொழும்புக்கு மாலை 5.30 க்கு ரயில்சேவை ஒன்றும் ஆரம்பமாகும்.
இதேவேளை கண்டி - கொழும்பு கோட்டை மற்றும் பெலியத்த - கொழும்பு கோட்டைக்கு இடையில் விசேட புகையிரத சேவையும் இயங்கி வருகின்றது.
இது தவிர, கொழும்பு கோட்டையில் இருந்து ஹிக்கடுவை வரையும், மாத்தறையில் இருந்து கொழும்பு கோட்டை வரையும் விசேட புகையிரத சேவையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.