அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எரிபொருள் சிக்கன வாகனம் வழங்கப்படும் என பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரம் அமைச்சு தெரிவித்துள்ளது
பதவிக்காலம் முடிவடையும் வரை அந்த வாகனங்களை பயன்படுத்தி மக்கள் சேவையை மேற்கொள்ள முடியும் என அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சொகுசு வாகனம் வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
மக்களின் வரிப்பணம் விரயமாவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
(colombotimes.lk)