தேர்தல் காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், ஆயுதப்படை மற்றும் பொலிஸ் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அதன் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
தேர்தலுக்கான விசேட அறை இன்று (12) முதல் இயங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
(colombotimes.lk)