10 கிராம் 350 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் தெலவல சந்தியில் நேற்று (08) கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிசை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.