45,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களின் ஏலம் நாளை (20) நடைபெறவுள்ளது.
91 நாட்களில் முதிர்வடையும் 50,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் நாளை ஏலம் விடப்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
182 நாட்களில் முதிர்ச்சியடையும் 65,000 மில்லியன் ரூபா பெறுமதியான உண்டியல்களும் இங்கு ஏலம் விடப்படும்.
364 நாட்களில் முதிர்ச்சியடையும் 30,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களின் ஏலமும் இங்கு நடத்தப்படும் என இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.