நாடு முழுவதிலும் உள்ள மதுபான சாலைகள் நவம்பர் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதாகவும், 15ஆம் திகதி பூரணை என்பதால் இவ்விரு நாட்களிலும் மதுக்கடைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகள் மூடப்படும் தினங்களில் சட்டத்தை மீறும் மதுபானசாலை உரிமையாளர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது