பொதுத் தேர்தல் பணிகளுக்காக பொலிஸ் அதிகாரிகள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொதுத் தேர்தலுக்காக 64,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும், 3,200 பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள், 12,227 சிவில் பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் சுமார் 10,000 இராணுவத்தினர் தேவைப்படும் பட்சத்தில் வரவழைக்க தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
(colombotimes.lk)