23 November 2024


தலைமன்னாருக்கான புகையிரத சேவை மீண்டும் ஆரம்பம்



கொழும்பு கோட்டையிலிருந்து தலைமன்னார் வரையிலான ரயில் பயணங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

கொழும்பு கோட்டைக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான புகையிரத சேவை 10 மாதங்களுக்கும் பிறகு இன்று (12) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இன்று மாலை 4.15 க்கு கொழும்பு கோட்டையிலிருந்து தலைமன்னாருக்கு புறப்பட்டு இரவு 10.15 க்கு தலைமன்னாரை சென்றடைய உள்ளது.

பின்னர் நாளை காலை 04.15 க்கு தலைமன்னாரிலிருந்து புறப்பட்டு காலை 10.15க்கு கொழும்பை வந்தடையும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இண்டிபொல குறிப்பிட்டுள்ளார்.

(colombotimes.lk)