தியத்தலாவ ரயில் நிலையத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது.
இதன் காரணமாக மலையகப் பாதையில் ரயில் இயக்குவதில் தாமதம் ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதமே தடம் புரண்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
பிற்பகலில் புகையிரதம் வழமைக்குத் திரும்பும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
(colombotimes.lk)