27 வருடங்களுக்கு முன்னர் ராஜாங்கனையில் நபர் ஒருவரை படுகொலை செய்ததாக அனுராதபுரம் மேல் நீதிமன்றில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த இரண்டு பிரதிவாதிகள் அந்தக் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வடமத்திய மாகாணத்தின் முன்னோடி உயர் நீதிமன்ற நீதிபதியும் தற்போதைய குளியாப்பிட்டிய உயர் நீதிமன்ற நீதிபதியுமான மனோஜ் தல்கொடபிடியவின் உத்தரவுக்கு அமையவே அவர்கள் விடுவிளக்கப்பட்டுள்ளனர்
ராஜாங்கனையை வசிப்பிடமாகக் கொண்ட தடிகமகே பிரேமசிறி என்ற உக்குவா மற்றும் கே. வசந்த குமார என்ற இரண்டு பிரதிவாதிகளுமே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
(colombotimes.lk)