குறுகிய கால அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக 70,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சதொச மற்றும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் ஊடாக இந்த அரிசி இறக்குமதி செய்யப்படுவதாக வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி பெருமளவான 'ஸ்வர்ண' நாட்டு அரிசியை இறக்குமதி செய்ய உள்ளதாகவும், அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்
(colombotimes.lk)