கையடக்க தொலைபேசி சேவையை வழங்கும் நிறுவனங்கள் சேவை பொதிகளுக்கான கட்டணங்களை அதிகரித்துள்ளதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது என தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் சந்தைப்படுத்தல் போட்டிப் பிரிவின் பணிப்பாளர் இந்திரஜித் ஹந்தபான்கொட இதனைத் தெரிவித்துள்ளார்.
வாடிக்கையாளர் நிறுவனங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு மொபைல் போன் பொதியின் விலையிலும் அதிகரிப்பு அனுமதிக்கப்படவில்லை என்றும் ,விலை உயர்வு எதுவும் செய்யப்படவில்லை என்பதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
பொய்யான பிரச்சாரங்களால் ஏமாற வேண்டாம் என்று இயக்குனர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்
(colombotimes.lk)