நாளொன்றுக்கு 2,500 வெளிநாட்டு கடவுசீட்டுக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னர் ஒரு நாளைக்கு 1,200 கடவுசீட்டுக்கள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அவசரமாக வெளிநாடு செல்ல வேண்டியிருந்தால், கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கு தனிச் பிரிவு திறக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் அன்னதா விஜேபால தெரிவித்தார்.
அந்த பிரிவில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஒரு குழுவால் பரிசீலிக்கப்பட்டு, உடனடியாக கடவுசீட்டுக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்தெரிவித்துள்ளார்
(colombotimes.lk)