அண்மையில் முடிவடைந்த 05 வருட புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் தாளில் முன்னதாக இடம்பெற்ற மூன்று வினாக்களுக்கும் இலவச புள்ளிகள் வழங்க எடுக்கப்பட்ட தீர்மானத்தின் மூலம் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நிபுணர்கள் முன்வைத்த மூன்று பரிந்துரைகளில் இருந்து பொருத்தமான பரிந்துரையை தெரிவு செய்து அதனை உடனடியாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்த வினாத்தாள்கள் வெளியானதில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள், ஐ. ஜி. எஸ். பிரேமதிலக்க மூன்று மில்லியன் ரூபாவையும், சமிந்த குமார இளங்கசிங்க இரண்டு மில்லியன் ரூபாவையும் அரசாங்கத்திற்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது