கடந்த 2015ஆம் ஆண்டு முதல் பல்வேறு தேவைகளுக்காக வழங்கப்பட்ட காணி தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
உரிய விசாரணையின் பின்னர் தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
(colombotimes.lk)