பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்புக்காக பயணிகளின் உரிமைகள் பட்டியல் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதன்படி, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் பேரூந்துகளுக்காக வழங்கப்பட்டுள்ள
சாரதி அனுமதிப்பத்திரத்தில் உள்ள அனைத்து நிபந்தனைகளையும், மாகாண சபைகளால் பேரூந்து சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதில் உள்ள நிபந்தனைகளையும் உள்ளடக்கி
பயணிகளின் உரிமை பட்டியல் தயாரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயங்கள் தொடர்பில் பஸ் சங்கங்கள் மற்றும் பயணிகள் சங்கங்களுடன்
கலந்துரையாடியதன் பின்னர் இறுதித் தீர்மானம் எட்டப்படும் என தேசிய போக்குவரத்து
ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
(colombotimes.lk)