பல கணினி குற்றங்கள் தொடர்பில் கண்டி குண்டசாலையில் உள்ள சொகுசு விடுதியில் வைத்து கைது செய்யப்பட்ட 130 சீன பிரஜைகள் கடுமையான பிணை நிபந்தனைகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்
ஒக்டோபர் 12ஆம் திகதி கண்டி டிஐஜி அலுவலகம் மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு 38 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
சந்தேக நபர்களில் 108 சீன இளைஞர்களும் 22 சீன யுவதிகளும் அடங்குகின்ற நிலையில் அவர்களை 75,000 ரூபா ரொக்கப் பிணையிலும் 10 இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் விடுவிக்க தெல்தெனிய நீதவான் மாவட்ட நீதிபதி தேவிகா சதுரங்கனி ஜயவர்தன உத்தரவிட்டார்.
(colombotimes.lk)