உயர்தரப் பரீட்சை நடைபெறும் தினங்களில் மாணவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு செயற்பாட்டையும் செய்ய வேண்டாம் என பரீட்சைகள் ஆணையாளர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை மக்கள் விதியாக இல்லாமல் உணர்வுடன் செய்ய வேண்டும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
உயர்தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,312 நிலையங்களில் இன்று (25) காலை ஆரம்பமானது.
(colombotimes.lk)