நீர்கொழும்பு முன்னக்கரை குளம் பகுதியில் படகு கவிழ்ந்ததில் 50 வயதுடைய தந்தையும் 20 வயதுடைய மகளும் நேற்று (24) காணாமல் போயுள்ளனர்.
விபத்தில் காணாமல் போன மகளின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் விபத்தில் காணாமல் போன தந்தையின் சடலம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(colombotimes.lk)