09 January 2025


தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் இருந்த ஒராங்குட்டான் உயிரிழப்பு



தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் இருந்த ஒரேயொரு ஒராங்குட்டான் உயிரிழந்துள்ளது.

இறக்கும் போது இதற்கு 15 வயது இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு இந்தோனேசியாவில் இருந்து நன்கொடையாக இந்த ஒராங்குட்டான்  பெறப்பட்டது.

அது இறப்பதற்கு 03 நாட்களுக்கு முன்னர் இருந்தே நோய்வாய்ப்பட்டிருந்ததாக மிருகக்காட்சிசாலையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும், ஒராங்குட்டான் விலங்கின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பேராதனை கால்நடை மருத்துவ பீடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 
(colombotimes.lk)