Clean Sri Lanka வேலைத்திட்டத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட போக்குவரத்து சோதனை நடவடிக்கைகள் தொடர்பில் இன்று (08) தனியார் பஸ் சங்கங்களுக்கும் பதில் பொலிஸ்மா அதிபருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ளது.
இதனையடுத்து, நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்வதில்லை என பஸ் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் வரம்பு மீறி தேவையற்ற அழுத்தங்களை பஸ்கள் மீது பிரயோகிப்பதை கண்டித்து நாடு தழுவிய ரீதியில் இந்த வேலைநிறுத்தத்தை முன்னெடுக்க பஸ் சங்கங்கள் நேற்று (07) இணக்கம் தெரிவித்திருந்தன.
இவ்வாறான நிலையில் இன்று காலை பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுடன் பஸ் சங்கப் பிரதிநிதிகள் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.