09 January 2025


அரசு நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்களை ஏலம் விடுவது குறித்து ஆலோசனை



அரச நிறுவனங்களில் அதிக திறன் கொண்ட V8 சொகுசு வாகனங்களை ஏலம் விட்டு மார்ச் 01 ஆம் திகதிக்கு முன்னர் வருமான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அமைச்சின் செயலாளர்கள் உட்பட அனைத்து அரச திணைக்களத் தலைவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஏலம் விடப்படும் வாகனங்களை எந்தவொரு அரச நிறுவனமும் கொள்வனவு செய்யக் கூடாது என நிதியமைச்சின் செயலாளர் சுற்றறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

(colombotimes.lk)