10 January 2025


பதிவு செய்யப்படாத கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்த தடை



இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் தொடர்பாடல் உபகரணங்களை கொண்டு வருவதை தடுப்பதே இதன் நோக்கம் என அதன் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத் தெரிவித்துள்ளார்.

அதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை இம்மாத இறுதிக்குள் அறிமுகப்படுத்த  இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதாக  தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை கவுன்சிலின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத் தெரிவித்துள்ளார்.

வர்த்தகர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் கையடக்க தொலைபேசிகளை பதிவு செய்ய இந்த மாதம் 28 ஆம் திகதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, IMEI எண்களைப் பதிவு செய்யாமல் பயன்படுத்தப்படும் தொலைபேசிகள் எதிர்காலத்தில் தொலைபேசி வலையமைப்பிலிருந்து அகற்றப்படும் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

(colombotimes.lk)